மேற்கு மராட்டியத்தின் சதாரா பகுதியில் பிரியங்கா மோஹிதே என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் இவர் பல்வேறு சிகரங்களை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா மோஹிதே இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான 3-வது சிகரம் என்ற பெருமையை கொண்ட காஞ்சன்ஜங்கா சிகரத்தை (8,586 மீ) வெற்றிகரமாக அடைந்தார்.
இதன் வாயிலாக 8,000 மீட்டருக்கு மேலுள்ள 5 சிகரங்களை அடைந்த முதல் இந்தியப்பெண் என்ற அவர் சாதனையை படைத்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக சென்ற 2013 ஆம் வருடம் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தையும் (8,849 மீ), 2018 ஆம் ஆண்டு இமயமலையில் அமைந்துள்ள லோட்சே மலையையும் (8,516 மீ), மவுண்ட் மகாலு (8,485 மீ) மற்றும் ஏப்ரல் 2021-ல் உலகின் 10-வது மிக உயரமான மலை சிகரமான அன்னபூர்ணா மலையையும் (8,091 மீ) ஏறி சாதனை படைத்து இருந்தார். இவரது அசத்தலான திறமைக்காக சென்ற 2020 ஆம் வருடத்தில் டென்சிங் நார்கே சாகச விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.