சீனாவை சேர்ந்த ஒரு துறவி 8,000 தெருநாய்களை காத்து வளர்த்துவருவது சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது.
சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வசிக்கும் பௌத்த துறவியான ஜி சியாங், கடந்த 1994 ஆம் வருடத்திலிருந்து இப்பகுதியின் தெருக்களில் ஆதரவற்று திரியும் உயிரினங்களை காப்பாற்றி ஆலயத்தில் அல்லது விலங்குகள் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார். தற்போது வரை சுமார் 8000 நாய்கள் அவர் பராமரிப்பில் இருக்கிறது.
https://twitter.com/AFP/status/1407198483602309121
இதற்காக வருடந்தோறும் 2 மில்லியன் டாலர்கள் செலவு செய்கிறார். ஒவ்வொரு மாதமும் 60 டன் உணவு அவற்றுக்காக வாங்குகிறார். மேலும் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்ல பிராணிகளை வளர்க்க விரும்புபவர்களுக்கும் கொடுத்து விடுகிறார். இவர், பரிதாபமான நிலையில் இருக்கும் இந்த நாய்களை நான் காக்கவில்லை எனில் அவை உயிரிழந்து விடும் என்று கூறியிருக்கிறார்.
நாய்கள் மட்டுமில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் பூனையையும் பராமரிக்கிறார். சமீப காலங்களில், சீனாவிலுள்ள தெருக்களில் அதிகமாக நாய்கள் விடப்படுகிறது. நாட்டில் சுமார் 50 மில்லியன் விலங்குகள் தெருக்களில் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அதன் எண்ணிக்கை இரண்டு மடங்காவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.