சென்னையில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் ரேவதி.இவருடைய வயது 45. இவர் அப் பகுதியில் உள்ள லூர்ஸ் சர்ச்சு வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருநங்கைகள் ரேவதியை வழிமறித்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்துள்ளனர். அப்போது ரேவதி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை திருடிச்சென்ற மூன்று திருநங்கைகள் வேகமாக ஓடியுள்ளனர்.அத்துடன் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி வேகமாக சென்றனர். அந்த பெண் கூச்சலிட்டும் கூட ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
இதனையடுத்து ரேவதி இச் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகளை தேடி வருகின்றனர். ரேவதி தனது கைப்பையில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் எட்டு ஆயிரம் பணமும் வைத்துள்ளார்.