Categories
உலக செய்திகள் கொரோனா

80,000 மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்… கொரோனா பரவலால் அரசு அதிரடி….!!

கொரோனா தொற்று இல்லாமலிருந்த வியட்நாமில் தற்போது 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தென் கொரியா,வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு  குறைந்து வருகிறது. வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நாட்டில் மொத்தம் 417 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள்.

வியட்நாம் அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக அங்கு கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இந்நிலையில் வியட்னாமில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு 100 நாட்கள் ஆன நிலையில் தற்போது புதிதாக 3 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மக்கள் தொகை கணக்கின்படி அந்த நாட்டின் 5வது மிகப்பெரிய நகரமாக இருக்கும்  தனாங் நகரில்தான் தற்போது  கொரோனா தொற்று 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் வெளியூருக்கோ, வெளிநாடுகளுக்கோ பயணம் மேற்கொள்ளாத நிலையில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது வியட்நாம் அரசுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது.

வியட்நாமின் புகழ் மிகுந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் தனாங் நகரில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால் அங்கிருக்கும் சுற்றுலா பயணிகள் 80 ஆயிரம் பேரை வெளியேற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. தினமும் 100 விமானங்கள் மூலம் நாட்டிலுள்ள 11 இடங்களில் சுற்றுலா பயணிகளை இடமாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதற்கான பணிகள் நடந்து முடிய 4 நாட்கள் ஆகும் எனவும் வியட்நாம் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |