ரயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பள உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே மிகப் பிரதான சேவையாக ரயில் பயணம் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே துறையில் 17 மண்டலங்களும் 68 பிரிவுகளும் உள்ளன. அதில் களப்பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த பணியாளர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கேட்டு கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலமாக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 2500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி ரயில்வே ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.