Categories
தேசிய செய்திகள்

80,00,000 லாட்டரியில் பரிசு… யாராவது திருட்டு போய் விடுவார்களோ..? பயத்தில் தொழிலாளி செய்த காரியம்..!!

மேற்குவங்க தொழிலாளிக்கு திருவனந்தபுரம் அருகே லாட்டரியில் 80 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளதால் திருட்டு பயம் காரணமாக  போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மருதம்குழி என்ற பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். பிரதீபா மண்டல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் . அதனால் அவர் மேற்கு வங்கத்திலிருந்து கேரளாவிற்கு வந்து தனியாக வேலை செய்து வருகிறார் . பிரதீபா மண்டல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் காருண்யா பாக்கிய குறி என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் .அவருக்கு அந்த லாட்டரி சீட்டில் பம்பர் பரிசாக ரூபாய் 80 லட்சம் விழுந்துள்ளது.

இதனை தெரிந்து கொண்ட பிரதீபா மண்டல் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் .ஆனால் பெரிய தொகை தனக்குப் பரிசாக கிடைத்துள்ளதால் அவர் மிகவும் பயந்து ,என்ன செய்வதென்று அறியாமல் பூஜப்புரா காவல் நிலையத்திற்கு சென்றார் .அங்கு சென்ற அவர் தனக்கும் தனக்கு விழுந்த பரிசுத் தொகை ரூபாய் 80 லச்சத்திற்கான லாட்டரி சீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்பு  காவலர்கள் பிரதீபா மண்டல் கூறுவது உண்மைதானா என்று சம்பந்தப்பட்ட பாக்கிய குறி லாட்டரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

பிரதீபா மண்டலுக்கு ரூபாய் 80 லட்சம் விழுந்தது, உண்மைதான் என்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அந்த லாட்டரி பரிசு தொகையை வங்கியில் டெபாசிட் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர் . ஆனால் அவருக்கு அவருடைய சொந்த ஊர் மேற்குவங்கம் என்பதால் திருவனந்தபுரத்தில் நிரந்தர வீடு முகவரி எதுவும் இல்லாததால் வங்கியில் அந்த பரிசு தொகையை டெபாசிட் செய்ய முடியவில்லை. பின்பு காவல் துறையினர் பரிசுத் தொகையைப் பற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் .

அதன்பின் வங்கி ஊழியர்கள் பிரதீபா  மண்டலுக்கு தற்காலிகமாக ஒரு வங்கி முகவரி கணக்கை தொடங்கி கொடுத்தனர் .பின்பு பிரதீபா மண்டல் மற்றும் அவருடைய லாட்டரி சீட்டையும் போலீசார் அவரது வாகனத்தில் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர் .அதன்பின்பு அவரிடமிருந்து லாட்டரி சீட்டு பெற்று வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது .

லாட்டரியில் பரிசு தொகை விழுந்ததைப் பற்றி பிரதீபா மண்டல் கூறியது:

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் பரிசு  லாட்டரியை யாராவது பறித்து சென்று விட்டால் என்ன செய்வது என்று அறியாமல் பயந்து நான் போலீஸ் நிலையத்தில் சென்று பாதுகாப்பு கேட்டேன் அவர்கள் என்னை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று பரிசுத்தொகையை வங்கியில் வைக்க உதவினார்கள் . இந்த பரிசுத் தொகையில் நான் புதிதாக கார் வாங்குவேன் பின்பு பெரிய வீடு கட்டுவேன் என்று கூறினார்.

Categories

Tech |