Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

82 1/2 லட்ச ரூபாய் மோசடி…. பஞ்சாப் வாலிபர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி புதூர் பகுதியில் விக்ரம் சுதாகர் என்பவர் நண்டுவிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாப்பில் இருக்கிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர், பங்கஜ் மித்தல் ஆகிய இருவரும் இயற்கை உரத்தை வாங்கி பஞ்சாபில் விற்பனை செய்து தருவதாக திருநாவுக்கரசிடம் தெரிவித்தனர். இதனை நம்பி திருநாவுக்கரசு அவர்களை விக்ரம் சுதாகருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி விக்ரம் சுதாகர் 82 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உர மூட்டைகளை பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கரம்வீர் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகிய இருவரும் உரத்தை பெற்று கொண்டு நீண்ட நாட்களாக பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி விக்ரம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பங்கஜ் மித்தலை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் கரம்வீரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |