ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று தொடங்கியுள்ளது. அதில் இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் பொருளாதார குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகிறது என ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையகரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. கடந்த வாரம் ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த காலம் மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் பொருளாதார குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றங்களுக்கு தண்டனையின்மை போன்றவை தான் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணங்கள் என ஐநா அறிக்கை தெரிவித்து இருக்கிறது. மேலும் அந்த அறிக்கையில் தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் நிகழாமல் இருப்பதற்காகவும் அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டும் என ஐநா அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
இந்த சூழலில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகளுக்கான செயல் உயர் ஆணையர் நடா அல் நஷிப் சமர்ப்பித்து இருக்கிறார். அதன்படி இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவும் முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காகவும் மனித உரிமை மீறல் நிகழாமல் தடுப்பதற்காகவும் தேவையான ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள புதிய அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன் என உயர் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐநா சபையின் உயர்மட்ட அமைப்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் நிதி அமைச்சர் அலி சத்ரி இந்த அறிக்கையை எதிர்த்து பேசும் போது, இலங்கையில் பொருளாதார குற்றங்கள் பற்றி இந்த அறிக்கை விரிவாக குறிப்பிடுகின்றது. ஆனால் இது கவலைக்குரிய விஷயம் ஏனென்றால் இந்த குறிப்பு ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் பொறுப்பை மீறுவதாகும். மேலும் இந்த தீர்மானத்தை மற்றும் அதை பின் தொடரும் நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்படும்.
இந்த நிலையில் நாட்டில் மனித உரிமைகளை முன்னெடுத்து செல்வதற்கும் பாதுகாப்பதற்கும் ரணில் விக்ரமசிங்கே அரசாங்கம் தளராத அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் எந்த ஒரு சர்வதேச நிதித்துறை தலையிடையும் அரசமைப்பை சட்ட திருத்தத்திற்கு எதிரானதாகவே அரசாங்கம் பார்த்து வருகிறது. அதனால் அரசாங்கம் அதனை எதிர்க்கும் மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை அரசு தொடர்ச்சியான ஈடுபாடு ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தை பின்பற்றுகின்றது. பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசு உடனடி பல்முனை தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது என இலங்கை நிதி அமைச்சர் அலி சபரி கூறியுள்ளார். இந்த சூழலில் நடந்த ஈழத் தமிழர் விடுதலைப் புலிகள் தொடர்பான போர் குற்றங்களுக்கான உரிமைப் பொறுப்பு கூறலைக் கூறும் தீர்மானங்கள் 2013 ஆம் வருடம் முதல் ஐநா உரிமைகள் அமைப்பு கொண்டு வந்திருக்கிறது.
2015ல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு வழக்கறிஞர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களின் பங்கேற்புடன் காமன்வெல்த் மற்றும் பிற வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் நம்பகமான நிதித்துறை செயல்முறையை நிறுவ வேண்டும் என இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் செப்டம்பர் 23ஆம் தேதி இலங்கை தொடர்பான சாத்தியமான விரைவு தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது இதனை தொடர்ந்து அக்டோபர் ஆறாம் தேதி புதிய வரைவு தீர்மானத்தின் மீது உறுப்பு நாடுகளுக்கு இடையே வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.