தீ விபத்து ஏற்பட்ட பகவதி அம்மன் கோவிலில் நனைந்த உண்டியலை எண்ணியுள்ளனர் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் தண்ணீர் அடித்து குளிரூட்டப்பட்டது. அப்போது கோவிலின் முன்பு வைத்திருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்களில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விட்டது.
இதனையடுத்து அந்த உண்டியலில் இருந்த பணத்தை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலன் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. எனவே 83 நாட்களுக்கு பிறகு எண்ணப்பட்ட ட அந்த உண்டியலில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 485 ரூபாய் பணமும், 23.600 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி ஆகியவை கோவில் வருமானமாக கிடைத்துள்ளது.