இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.90 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4,834 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,818ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,394ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 93,322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23,233 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 16,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 19,844 ஆக உள்ளது. ராஜஸ்தான் – 8,831, பீகார் – 3,815, ஆந்திரா – 3,679, கர்நாடகாவில் 3,221 பேரும், தெலுங்கானா – 2,698, ஹரியானா – 2,091 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர்.கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.