கன்னி ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உருவாகின்ற குளறுபடிகளை நீங்கள் சரி செய்வது ரொம்ப அவசியம். பணவரவை விட இன்றைக்கு செலவு கொஞ்சம் கூடும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். எந்திரப் பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் வேண்டும்.
தீ, ஆயுதம் ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது தவிர்க்க வேண்டும் யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் சொல்ல வேண்டாம். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் கடுமையான உழைப்பு இருக்கும்.
இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்டாமல் இருந்தால் அது போதும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை எழுதி பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்