Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

84தொகுதியில் செக்…! நேரடியாக களம் இறங்கி பிரசாரம்… கடும் சிக்கலில் அதிமுக …!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அறிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 84 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய எங்கள் சமுதாய மக்களுக்கு இந்த அரசாங்கமும், நாங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தேர்தலில் நானே களத்தில் இறங்குவேன்.

எங்களுடைய கோரிக்கைகளுக்கு இளைஞர்களை ஒருங்கிணைத்து,  தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து,  எங்களுக்கு செய்த துரோகத்தை மக்களிடம் சொல்லுவோம். தமிழகத்தில் நாங்கள் இல்லாமல் எவர் ஒருவராலும் அரசியலை செய்ய இயலாது என்கின்ற நிலையை நாங்கள் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்கின்ற நிலையில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆகவே இந்த அரசுக்கு மீண்டும் ஒருமுறை நான் வைக்கக்கூடிய கோரிக்கை வைக்கின்றேன்.

Categories

Tech |