பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரில் வால்டர் ஆர்த்மேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரே கம்பெனியில் 84 வருடங்கள் பணிபுரிந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 100 வயது பூர்த்தியடைந்த ஆர்த்மேன் துணி ஆலையில் பணியாற்றி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது துணி உற்பத்தி நிறுவனத்தில் சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்த ஆர்த்மேன் படிப்படியாக உயர்ந்து நிர்வாக பதவிக்கு வந்து, இறுதியில் விற்பனை மேலாளராக ஆகியுள்ளார்.
ஆகவே விரும்புவதை செய்து துரித உணவுகளிலிருந்து விலகி இருந்தால் நீண்ட காலம் நிறைவான தொழில் வாழ்க்கை சாத்தியம் என்கிறார் ஆர்க்மேன். அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்கும்படி இளைஞர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.