பிரேசில் நாட்டில் முதியவர் ஒருவர் 84 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலில் 84 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது மாதம் ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு மத்தியில் பிரேசில் நாட்டின் பிரக்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்த்மான் (100).
ரெனக்ஸ் வியூ என்ற ஆடை நிறுவனத்தில் தனது 16 வயதில் சாதாரண ஊழியராக பணிக்கு சேர்ந்த ஆர்த்மான் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மெல்ல மெல்ல பதவி உயர்வு, அதற்கேற்ற சம்பள உயர்வு ஆகியவற்றால் அந்நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.