Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் 8,400 பேர் பங்கேற்பு – அதிர்ச்சி தகவல் …!!

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து வருகின்றன. மத்திய மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனாலும் மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் டெல்லியில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 536 பேர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1810  பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2346 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் 8,400 பங்கேற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Categories

Tech |