Categories
உலக செய்திகள்

பிரான்சின் புகழ் பெற்ற தேவாலயத்தில் திருத்தப்பணிகள்.. மில்லியன் கணக்கில் குவிந்த நிதி..!!

பிரான்ஸ் நாட்டின் நோர்து டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 840 மில்லியன் யூரோக்கள் நன்கொடை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் இருக்கும் 850 வருடங்கள் பழமையான, புகழ் வாய்ந்த தேவாலயமான நோர்து-டேம் கடந்த 2019-ஆம் வருடத்தில் தீ விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு கோபுரங்கள் கடும் சேதமடைந்தது. எனவே, நோர்து டேம் தேவாலயத்தில் திருத்தப்பணிகள் செய்வதற்காக நன்கொடைகள் கேட்கப்பட்டது.

இதனையடுத்து, தேவாலயத்தில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வரை 842.8 மில்லியன் யூரோக்கள் நன்கொடை கிடைத்திருப்பதாக,  தேவாலயத்தின் புணரமைப்பு பொறுப்பாளராக இருக்கும் Jean-Louis Georgelin கூறியிருக்கிறார்.

இதில், fondation du patrimoine மூலம், 232 மில்லியன் யூரோக்களும், Fondation de France மூலம் 31 மில்லியன் யூரோக்களும், Center des monuments nationaux  மூலம் 7.8 மில்லியன் யூரோக்களும்  கிடைத்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. வரும் 2024-ஆம் வருடத்தில் தேவாலயத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, மீண்டும்  திறக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |