தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் வயது வாரியான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 7,365 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று அறிகுறியுடன் 4,614 பேர் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், வயது வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களில் 8,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.