Categories
மாநில செய்திகள்

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க…. 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பள்ளிகள்…. முதல்நாளிலேயே 85%….!!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 85%  மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு  நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளை திறக்க முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழக  அரசு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைத்தது.

அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஜனவரி 6 மற்றும் 7வது தேதி பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம்  கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை  திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பொதுத்தேர்வு எழுத உள்ள  10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில்  உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 19 லட்சத்து 20 ஆயிரத்து 13 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பெற்றோரின் அனுமதியுடன் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.

Categories

Tech |