Categories
உலக செய்திகள்

“ஐய்யயோ! சிரியாவில் பயங்கரம்”…. தீவிரவாதிகளிடம் சிக்கிய 850 குழந்தைகள்… அதிர்ச்சி தகவல்…!!!

ஐநாவின் யுனிசெப் அமைப்பு சிரிய நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் சிறையில் சுமார் 850 குழந்தைகள் மாட்டிக் கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.

சிரிய நாட்டில் சுமார் 3500 நபர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் தப்பியோடி விட்டனர். இந்நிலையில் சிறையை கைப்பற்றுவதில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே கடந்த 6 நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்தது. இதில் 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததுடன் 45,000-த்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹசாக்கா நகரத்தில் இருக்கும் குவைரான் போன்ற அடிப்படை வசதியற்ற தற்காலிகச்  சிறை பலவற்றில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஆயிரக்கணக்கான மக்களை குர்திஷ் படை, பிடித்து வைத்திருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |