Categories
மாநில செய்திகள்

பயிற்சியில் இருக்கும் 8,538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு… தமிழக அரசு!

காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பணிக்காக தமிழகத்தில் காவல்துறையால் எழுத்து தேர்வு, உடற்பயிற்சி தேர்வு முடிக்கப்பட்டு தற்போது 8538 பேர் பயிற்சியில் உள்ளனர்.

இவர்கள் வருகிற 3ம் தேதிக்குள் உடனடியாக பணியில் சேருமாறு ஆயுதப்படை டிஜிபி கரண் சின்ஹா கூறியுள்ளார். மேலும் வரும் 2ம் தேதிக்குள் இவர்களுக்கு சுவாச பிரச்சனை, காய்ச்சல் அறிகுறிகள் ஆகியவை இருக்கிறதா? என்பதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஏதேனும் அறிகுறி இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |