தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்
- துணை ஆட்சியர் (18),
- துணை போலீஸ் சூப்பிரண்டு (19),
- வணிக வரித்துறை உதவி கமிஷனர் (10),
- கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14),
- ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4),
- தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1)
உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
ஆண்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401 பேரும், பெண்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 11 பேரும் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 737 பேர் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இன்று தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சென்னையில் 150 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 856 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க 856 முதன்மை பணியாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 46 ஆயிரத்து 965 பேர் குரூப்-1 தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு எழுதும்போது சமூக இடைவெளியுடன் தேர்வுகள் அமரவேண்டும் என்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடக்க உள்ளது.