இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டே தன் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.
இத்தாலியில் இதுவரை கொரோனாவால் 2,475,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85,881 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமர் கியூசெப் கொன்டே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்யாதது தான் அதிக உயிரிழப்பு ஏற்பட காரணம் என்று அவர் மீது குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தது.
கொரோனா மீட்பு பணிக்காக 750 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்க்கு ஒதுக்கப்பட்டது. அதில் 250 பில்லியன் யூரோக்குகளை இத்தாலிக்கு பயன்படுத்தப் போவதாக கியூசெப் கொன்டே தெரிவித்தார். ஆனால் அவரது இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தது.
இதனால் கொரோனா செலவில் நெருக்கடி ஏற்பட்டு அதன்பின் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியது. இந்நிலையில், கியூசெப் கொன்டே செனட்டில் தனது பெரும்பான்மையை இழந்தார். இதனால்,இன்று காலை அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். இத்தாலி அரசாங்கம் இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால் இத்தாலியில் கூடிய விரைவில் புதிய தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.