சம்பளமே வாங்காமல் வேலை செய்கின்றார் இசையமைப்பாளர் அனிருத்.
தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் சென்ற 10 வருடங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவாகும் பாடல்களையும் பாடியிருக்கின்றார். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான், யுவன், இமான், சந்தோஷ நாராயணன் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் அனிருத் பாடியுள்ளார். இந்த நிலையில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய அனிருத் இதுவரை சம்பளமே வாங்கியதில்லையாம். இசை மீது தனக்கு இருக்கும் காதல் காரணமாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் போது சம்பளம் வாங்குவதில்லை என தெரிவித்திருக்கிறார்.