ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல் நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன் பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கின்றது. இதனால் முதல் கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் எல்லைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அந்தந்த இடங்களில் அமைந்துள்ள மரங்களைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் கூடல்நகல் என்ற கிராமம் மட்டும் முழுமையாக காலி செய்யப்பட்டு அந்தப் பகுதி மக்கள் மறு குடியமர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 37 குடியிருப்பாளர்களுக்கு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி அய்யாநகர் பகுதியில் கூடல் நகர் பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு குடியமர்வுக்கான முதல் கட்டப் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இஸ்ரோ அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது குடி அமர்வுக்கான வரைபடத்தை அதிகாரிகள் வழங்க அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.