Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடி வேட்டை”….. கோட்ட பொறியாளர் உட்பட சிக்கிய 3 பேர்… வழக்கு பதிவு….!!!!!!

போட்ட பொறியாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சென்ற 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை வேட்டையில் இறங்கினார்கள்.

இதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கோட்ட பொறியாளர் இளவழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து. இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். இந்த பணம் குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் ஒப்பந்ததாரர்கள் லஞ்சமாக கொடுத்த பணமா என சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |