தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டரை கோடி மதிப்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இங்கே ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது.
பணி விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறியுள்ளதாவது, நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றால் ஏற்படும் சாலை நெறிசல்கள் காரணமாக பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும் நெரிசல் ஏற்படுகின்றது. இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம். இந்த பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை நிறுத்த அங்கு இங்குமாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது என கூறியுள்ளார்கள்.