விற்பனைக்காக வைத்திருந்த ராட்சத மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒலம்பஸ் அருகில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களாபுரம் பகுதியில் இருக்கும் கடலில் பிடிபட்ட சுமார் 86 கிலோ எடையுடைய ராட்சத மீனை ஏலம் எடுத்து வந்து கடையில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
இதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து கபீர் கூறும்போது, முதன்முறையாக 86 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை விற்பனைக்காக வைத்துள்ளோம். இந்த மீன் கிலோவிற்கு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.