Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேர் இன்று டிஸ்சார்ஜ்…!!

கொரோனவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 86 பேர் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அனைவரும் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் சேலம் வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 69 ஆக குறைந்துள்ளது.

நேற்று வரை சேலத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்திருந்தது. அதில் 68 பேர் குணமடைந்த நிலையில் 146 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 86 பேர் நலமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

முதலில் குறைந்த நபர்களே சேலம் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் குணமடைந்த பிறகு பச்சை மண்டலமாக சேலம் மாறியது. பின்னர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |