ஈரானிய பெண்களின் போராட்டம் மற்றும் அங்கீதா பண்டாரிக்கு ஆதரவாக பிரபல இந்தி நடிகை தனது தலைமுடியை வெட்டி இருக்கின்றார்.
ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு பிரபல இந்திய நடிகையான ஊர்வசி ரவுதலா ஆதரவாக தனது முடியை வெட்டி இருக்கின்றார். ஈரானியப் பெண் அமினியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக ஆதரவாக இந்த முடிவை எடுத்து இருக்கின்றார்.
இதுபோல உத்தரகாண்டில் விஐபிகளுக்கான ரெசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம் பெண் அங்கீதா பண்டாரிக்கு ஆதரவாகவும் இம்முடிவை எடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இதை அவர் தனது முடியை வெட்டிக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். பெண்களை மதியுங்கள் பெண்களின் புரட்சிக்கான சர்வதேச அடையாளம் இது. தலைமுடி பெண்களின் அழகுக்கு அடையாளம். இந்த முடியை பொதுவெளியில் வெட்டி சமூகத்தின் அழகு நடைமுறைகளைப் பற்றி பெண்கள் கவலைபடவில்லை என முன் உதாரணமாக இதை செய்துள்ளார்.
https://www.instagram.com/p/Cjyag0Yhy0m/?hl=en