அர்னவிற்கு ஆதரவாக பேசிய நடிகரை நெட்டிசன்கள் விளாசி வருகின்றார்கள்.
கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும் திவ்யா புகார் கொடுத்தார்.
இதனால் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் அனைத்து மகளிர் போலீஸ்சார் அர்னவ்வுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் 18-ம் தேதி ஆஜராவாதாவும் வக்கீல் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அர்னவ்வை கைது செய்தார்கள்.
இந்த நிலையில் சக நடிகரும் அர்னவின் தோழருமான அருண், அவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, அர்னவை எனக்கு எட்டு ஆண்டுகளாக தெரியும். என் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களில் அவர் என்னுடன் இருந்திருக்கின்றார். ஜாதி, மத பேதம் பார்க்காத நல்ல மனிதர். பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றார். அவர் சுத்தமான இருதயம் கொண்டவர். ஆனால் இன்று அவரது குடும்ப விவகாரத்தில் ஒரு பிரச்சனை வரும்போது சக நடிகர்களில் சிலர் தேவையில்லாமல் நுழைகின்றார்கள்.
அர்னவுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகின்றார்கள். அது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை. இதை அவர்கள் கடந்து வர நாம் நேரம் கொடுக்க வேண்டும். ஆகையால் மீடியா, சக ஆர்ட்டிஸ்ட் என அனைவரும் அவர்களுக்கான நேரத்தை கொடுங்கள். நீ தப்பு நான் தப்பு என பேச வேண்டாம். நான் எனது நண்பன் அர்னவிற்காக நிற்கின்றேன் என கூறி இருக்கின்றார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி மனைவிக்கு தெரியாம கள்ள தொடர்பு வைக்குறதையும் மனைவியை அடிக்கிறதையும் சுத்தமான மனசு இருக்கிறவன் செய்யற வேலையா? இதையும் நீ ஆதரிக்கிறியா? என அவரை விளாசி வருகின்றார்கள்.