உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என கோரிக்கை மேலோங்கி நிற்கின்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு மக்களிடையே தனிச்சிறப்பு இருக்கின்றது. இங்கிருக்கும் பனைமரங்களில் இருந்து கிடைக்கும் பனை தனி சிறப்பு மிக்கது. இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்குடியை அடுத்த குலசேகரன்பட்டிடத்தில் பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்ட நிலையில் பதநீர் பெறுவதற்காக திருச்செந்தூரிலிருந்து குலசேகரன் பட்டினம் வழியாக திசையன்விளை வரையிலும் தண்டவாளம் அமைக்கப்பட்டு தனி ரயில் இயக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தில் அந்த ஆலை மூடப்பட்டதால் ரயில் பாதையும் கைவிடப்பட்டது. அவற்றின் இசுவடுகள் இன்னும் இருக்கின்றது. தற்போது உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பமாகவே அனைவரும் இத்தொழிலை செய்து வருகின்றார்கள். ஆகையால் பாரம்பரியமிக்க உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது