Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப் ஏற்றி கொள்ள முயற்சி”…. 2 பேர் கைது….!!!!!

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு. பள்ளி மாணவனான சீனு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் நான்காவது நாளாக மாணவனின் உடலை வாங்காமல் சாலை மறியல் போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது. இதனால் அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் யாரும் நுழைந்து விடாதபடி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின் ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு அமைப்பை சேர்ந்தவர்களின் ஜீப்பை நிறுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அப்போது ஊர் கிராமவாசிகள் தவிர வேறு யாரும் ஊருக்கு சொல்ல அனுமதி இல்லை எனக் கூறியிருக்கின்றார்.

இதை அடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஊருக்குள் செல்ல அனுமதிக்காததால் இன்ஸ்பெக்டர் மதனகலா மீது ஜீப் ஏற்ற முயற்சி செய்ததாக சொல்லப்படுகின்றது. இதில் அவர் தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக சந்திரசேகர், குற்றாலம் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்கள். மேலும் ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |