Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 861 பேர் டிஸ்சார்ஜ்; 12 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 232ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 861 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.93% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,438 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,405 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,60,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 44 அரசு மற்றும் 30 தனியார் மையங்கள் என மொத்தம் 74 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |