Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்து கொண்ட மாணவன்”…. உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்….!!!!!!

சேர்ந்தமரம் அருகே தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். சென்ற 14ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டார். பின் மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில அமைப்புகள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட சூப்பிரண்டு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் உடலை வாங்க மறுத்தார்கள். நேற்று முன்தினம் நான்காவது நாளாக உடலை வாங்க மறுக்க போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாணவனின் இறப்பிற்கு நீதி கேட்டு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தார்கள். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது போராட்டத்திற்காக வந்த 58 பேர் கைது செய்யப்பட்டு சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |