தூத்துக்குடியில் இருக்கும் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 24 மயில் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படுபவர் குரூஸ் பர்னாந்த். தூத்துக்குடி நகர மக்களின் பெருமதிப்பு பெற்ற இவரின் பிறந்த நாள் நவம்பர் 15ஆம் தேதி அரசு சார்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் அவருக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக தமிழக அரசு 77 லட்சத்து 87 ஆயிரத்து 343 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மணிமண்டபம் அமைப்பதற்காக ரோச் பூங்காவில் இருக்கும் காலி இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. அங்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.