மம்முட்டிக்கு எதிரியாக முகம் காட்டாமல் பிரபல நடிகர் நடித்துள்ளார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் அண்மையில் ரோஷாக் என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வழக்கமான கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட திரைப்படமாக, சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமாக வெளியாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதை என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கி இருக்கின்றார்கள்.
இத்திரைப்படத்தில் மம்முட்டியின் மனதிற்கு அடிக்கடி எதிரியாக தோன்றும் எதிரியாக சாக்கு முகமூடி அணிந்த உருவம் ஒன்று பல காட்சிகளில் வந்திருக்கும். இந்த கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் ஆஷிப் அலி நடித்திருப்பார். படம் வெளியான பிறகு தான் இத்தகவலே வெளியானது. இவரின் நடிப்பு குறித்து அண்மையில் மம்முட்டி பாராட்டி படத்தில் நடித்த மற்றவர்கள் அனைவரும் தங்கள் உடல் மொழி மூலமாக நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம் ஆசிப் அலி தனது உருவத்தை காட்டாமல் நடித்திருந்தாலும் கண்களிலேயே அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் என புகழ்ந்துள்ளார்.