அஜித் ரசிகர் ஒருவருக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உதவியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தனது அம்மாவின் மருத்துவ செலவிற்காக இருந்த பணத்தையும் மேலும் பணத்திற்காக கடன் வாங்கியும் செலவழித்ததாகவும் தற்போது கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு ஜி.வி பிரகாஷ் உடனடியாக கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உதவி உள்ளார். இதற்கு அந்த ரசிகர் இந்த உதவியை தன் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.