கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிபாடு மையம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகின்ற 22ஆம் தேதி நடத்த இருக்கின்றது.
இந்த முகமானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் ஆரம்பமாகும். முகாமில் தகுதியுடைய பெண்கள் பங்கேற்கலாம். அது என்னவென்றால் 2020-21 மற்றும் 2022-ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் 18 முதல் 20 வயதுடையராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு 12 நாட்கள் பயிற்சியிலும் மாத சம்பளமாக 16,557 மற்றும் உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகள், நிரந்தர பணி நியமனம் உள்ளிட்டவை டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.