ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதியதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மூலப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ஓய்வு பெற்ற வன ஊழியர். இவர் தனது மனைவி பாப்பாத்தியுடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். இவர்கள் செட்டிபாளையம் பிரிவு பூந்துறை ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த கிரேன் சுப்ரமணி ஒட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சுப்பிரமணி மற்றும் பாப்பாத்தி கிரேனுக்குள் சிக்கி, சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்தில் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்ரமணி மற்றும் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.