கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிற்படிப்பு மற்றும் தொழிற் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022-23 ஆம் கல்வியாண்டுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு 30,000 மாணவிகளுக்கு 36,000 வழங்கப்பட இருக்கின்றது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண் 0421 2971137 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.