Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம்”…. தேசிய அளவில் படங்களுக்கு கௌரவம்….!!!!!

தேசிய அளவில் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படமும் 2021 ஆம் வருடம் ஜெய் பீம் என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அண்மையில் சூர்யாவுக்கு ஒரு விழாவில் விருது கிடைத்தது.

சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என ஐந்து தேசிய விருதுகளை பெற்றது. அடுத்த வருடம் ஜெய் பீம் திரைப்படம் தேசிய விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அதிக ரேட்டிங் பெற்று 250 இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஜிஎம்டி நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் 20 இடத்திற்குள் சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |