Categories
சினிமா தமிழ் சினிமா

“அன்புள்ள சூர்யாவுக்கு நன்றி”…. நடிகர் மம்முட்டி இணையத்தில் பதிவு…!!!!!!

நடிகர் சூர்யாவுக்கு மம்முட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே.

இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். மலையாளத் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடிப்பில் உருவாக இருக்கும் மலையாள திரைப்படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது. குடும்ப பின்னணி திரைப்படமாக உருவாகும் அந்த படத்தை ஜியோ பேபி இயக்க உள்ளதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் அண்மையில் காதல் என்ற பெயரில் படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்தார் மம்முட்டி.

போஸ்டரை பகிர்ந்து சூர்யா முதல் நாளிலிருந்து இப்படத்தின் ஐடியா மற்றும் இயக்குனர் ஜோ பேபி குழுவினர் மற்றும் மம்முட்டி கம்பெனி உள்ளிட்டவை வைத்த ஒவ்வொரு அடியும் சிறப்பாக இருந்தது. மம்முட்டி ஜோ மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோ என குறிப்பிட்டு இருக்கின்றார். இதற்கு அன்புள்ள சூர்யா நன்றி என மம்முட்டி பதிலளித்து இருக்கின்றார்.

Categories

Tech |