ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை திருத்த ஆவணங்களை வழங்க கோரி தாய், மகள்கள் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார்கள்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 17ஆம் தேதி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் முன்பாக மலைக்கன்னிகாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து ஆட்சியர் விசாரணை செய்ததில் விஜயலட்சுமி தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரின் பூர்வீக வீட்டு மனை 300 சதுர மீட்டர் ஆகும். ஆனால் வீட்டுமனை பட்டாவில் 30 சதுர மீட்டர் என தவறுதலாக இருக்கின்றது. ஆகையால் வீட்டு மனை அளவீடு செய்து அதை திருத்தம் செய்து தர பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என முறையிட்டார்.
இதை தொடர்ந்து ஆட்சியர் வருவாய்த் துறையிடம் அந்த இடத்தை முழுமையாக அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பின் போலீசார் அங்கு சென்று வீட்டுமனை அளவீடு செய்தார்கள். மேலும் இது குறித்த ஆவணங்களை தரும்மாறு வருவாய்த்துறையினரிடம் ஜெயலஷ்மி முறையிட்டார். இதனால் அதிகாரிகள் விரைவில் முழு விவரங்களையும் தருவதாக கூறினார். இந்த நிலையில் சென்ற 29ஆம் தேதி இரவு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தங்கை , தாயுடன் வந்த விஜயலட்சுமி வீட்டுமனை அளவீடு செய்த ஆவணங்களை தராமல் வருவாய்த் துறையினர் அலைக்கழிப்பதாக கூறிய திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
பின் அவரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது விஜயலட்சுமி வீட்டுமனை ஆவணங்களை உடனடியாக கொடுக்க வேண்டும். அதுவரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் என கூறினார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் தான் முடிந்தது. இதனால் விஜய் லட்சுமி தனது தாய் தங்கையுடன் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஒரே நாட்களில் வீட்டுமனை திறத்த ஆவணங்களை வருவாய்த் துறையினர் தருவதாக சமாதானம் செய்தார்கள். இதன்பின் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.