Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தீபாவளியையொட்டி மடமடவென உயர்ந்த விலை”…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!!

தீபாவளியையொட்டி ஆடைகள், மளிகை பொருட்கள், பட்டாசுகளின் விலை உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அனைவரும் புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்டவற்றின் கடைகளை நோக்கி குவிந்து வருகின்றார்கள். இந்த நிலையில் அந்த பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றது.

சென்ற 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், எண்ணெய் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு 10 முதல் 20 வரை உயர்ந்திருக்கின்றது. மேலும் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவற்றின் விலை கிலோவிற்கு 50 முதல் 100 வரை உயர்ந்திருக்கின்றது. தீபாவளியொட்டி பருப்பு வகைகள், எண்ணெய், ஆடைகள், பட்டாசுகளின் விலை உயர்வு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட் தற்போது எதிர்பார்த்ததை விட அதிகமாக்கி இருக்கின்றது.

இதன் காரணமாக மக்கள் தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப தேவைகளை பாதியாக குறைத்துள்ளார்கள். அதாவது இரண்டு ஆடைகள் எடுக்கும் இடத்தில் ஒன்று மட்டும் எடுக்கும் நிலையம் பல பட்டாசு பாக்ஸ்கள் வாங்கும் விலையில் ஒன்று, இரண்டு பட்டாசு பாக்ஸ் மட்டுமே வாங்கி செல்கின்றார்கள்.

Categories

Tech |