Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு மாநிலத்திற்கு அகதிகளாக அனுப்பிடுங்க”…. கிராம மக்கள் உருக்கமாக வேண்டுகோள்….!!!!!

எங்களை வேறு மாநிலத்துக்கு அகதியாக அனுப்பி விடுங்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அருகே இருக்கும் சூரியூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலக அதிகாரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சூர்யூரில் 90 குடும்பத்தினர் வசித்து வந்தோம். நாங்கள் வசித்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி சில மாதங்களுக்கு முன்பு எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் நாங்கள் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து வசித்து வரும் நிலையில் அவர்களும் வீட்டை விட்டு செல்லும்படி கூறுகின்றார்கள்.

இதனால் தங்க வீடு இல்லாமல் குழந்தைகள், ஆடு, மாடுகளை வைத்து தவித்து வருகின்றோம். எங்களுக்கு இலவச பட்டா கேட்டு அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை. ஆகையால் நாங்கள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அகதிகளாக வருகிறோம். எங்கள் பிள்ளைகளையும் ஆடு, மாடுகளையும் காப்பாற்ற ஆதரவு தாருங்கள் என கேட்டோம். ஆகையால் எங்களை அந்தந்த மாநிலங்களுக்கு அகதியாக அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |