Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியவில்லையா….?” உயர்கல்வி வழிகாட்டி முகாம்….!!!!!

+2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது பேசிய ஆட்சியர் +2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி முகாம் நடந்து வருகின்றது.

இந்த முகாம் மூலம் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அழகு கலை பயிற்சி, செல்போன் பழுது நீக்கும் பயிற்சி, ஆட்டோ மொபைல் பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை குறுகிய காலத்தில் அளிக்கப்படுகின்றது. மேலும் மாணவ-மாணவிகள் வேலை பார்த்துக்கொண்டு படிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இது குறித்த விவரம் மாணவர்களுக்கு கூறப்படும். மேலும் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் வரை எந்த வித பிணையமும் இல்லாமல் கடன் கொடுக்கப்படும் என கூறினார்.

Categories

Tech |