பிரபல நடிகர் மேடையில் பேசும் போது அவேசப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திராவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதற்காக ஜனசேனா கட்சியை ஆரம்பித்ததாகவும் பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே பேசிய போது நான் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டிறியமாக இருக்கின்றேன் என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. இனி இதுபோல பேசினால் செருப்பால் அடிப்பேன் எனக் கூறி தனது காலில் இருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். மேலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை அவசர அவசரமாக பார்த்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.