நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் கருவுற்றிருந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின் அன்னையர் தினத்தன்று முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார்.
திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மகன் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வர வேண்டும் என கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் எப்படி வேகமாக போனது என்றே தெரியவில்லை. தாயானது என் வாழ்க்கையில் முக்கிய மாற்றம். பயந்து வாழ்ந்த இளம் பெண்ணாக இருந்து இப்போது அம்மாவாக மாறி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு இருக்கின்றேன்.
எனது வேலைகள் நடுவில் ஒரு அம்மாவாக சரியாக நடந்து கொள்வது எனக்கு சவாலாகத்தான் இருக்கின்றது. குழந்தைக்கு தேவையான அனைத்தையும் இந்த அளவு மகிழ்ச்சியாக செய்வேன் என்று நான் நினைக்கவே இல்லை. குழந்தை பிறந்தது, நகர்வது எல்லாம் ஒரு இரவில் நடந்தது போல இருக்கிறது. முதல் ஜலதோஷம், நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது எல்லாம் விரைவாக நடந்துள்ளது. எங்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றியுள்ளாய். உன் அம்மாவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது என கூறியிருக்கின்றார்.