பிரபல இயக்குனருக்கு பிரபல தயாரிப்பாளர் விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார்.
நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்ஷன் ஆக எடுத்து இருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள். இப்படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை எனவும் கூறியுள்ளார்கள். மேலும் ராமர் கோவில் தலைமை குருக்களும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயக்குனர் ஓம் ராவத்திற்கு தயாரிப்பாளர் பூஷன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதன் வாயிலாக தங்களுக்கு எவ்வித கருத்து மோதலும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக பலரும் கூறி வருகின்றார்கள்.