நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கின்றார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ரவுலே நடிப்பதாகவும் அதில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றாராம். இத்திரைப்படம் திரில்லர் பாணியில் உருவாகின்றது.
படத்திற்கு “தி ஐ” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இத்திரைப்படம் தனக்கு ஸ்பெஷலான திரைப்படம் எனவும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்ருதிஹாசன் கிரிஸ் நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.